Aran Sei

முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துங்கள் – தொண்டர்களுக்கு கட்டளையிட்ட பாஜக தலைவர்

னவரி 9ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபரூக்கியின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துமாறு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) தொண்டர்களுக்கு பாஜக கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று(டிசம்பர் 25), ஹைதராபாத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, பாஜக மற்றும் பிஜேஒய்எம் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ள பண்டி சஞ்சய் குமார், நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபரூக்கியை நிகழ்ச்சி நடத்த அழைத்ததற்காக தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ்வை விமர்சித்துள்ளார்.

“அமைச்சரும் அவரது மகனும் நாத்திகர்கள். முனாவர் ஃபரூக்கி தனது நிகழ்ச்சிகளில் துர்கா, சீதை, ராமர், ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அவமதித்திருக்கிறார். அதனால், அவரை இங்கு வரவேற்கிறார். இம்மாநிலத்தை ஆள்பவர்கள் என்ன வகையானவர்கள் என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் முனாவர் ஃபரூக்கியின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை தடுத்து, அது நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் செயல்பாட்டாளர்களை பண்டி சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்