Aran Sei

‘பயங்கரவாதியை ஏன் பாஜகவில் சேர்த்துக்கொள்கிறீர்கள்?’ – ஆம்ஆத்மி கேள்வி

டந்த பிப்ரவரி மாதம், டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்காக கபில் குஜ்ஜார் என்பவர் மேல்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. அவர் பாஜகவின் காஜியாபாத் அலுவலகத்தில் வைத்து அக்கட்சியில் இணைந்துள்ளார். சில மணி நேரம் கழித்து அவரது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவின் மாவட்டத் தலைவர் சஞ்சீவ் சர்மா, கபில் குஜ்ஜரின் கடந்த காலத்தைப் பற்றி எந்தத் தகவலும் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். “அவர் கட்சியில் சேர தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவரது குற்றவியல் பின்னணியை பற்றி எங்களுக்குத் தெரியாது. அதை பற்றி எங்களுக்குத் தெரியவந்தவுடன் அவரது உறுப்பினர் பதவியை நாங்கள் ரத்து செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார். சஞ்சீவ் சர்மா கபில் குஜ்ஜருக்கு காவி துண்டு போற்றி வரவேற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஷாகின் பாக் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் : பாஜகவில் இணைந்தார்

பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவத்தின் போது பதிவான காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதில் கபில் குஜ்ஜார், ’நம் நாட்டில், இந்துக்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள், வேறு யாரும் வெல்ல முடியாது’ என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் இரண்டு மூன்று முறை மேல்நோக்கி சுட்டுள்ளார். தற்போது, அவர் பிணையில் வெளியே வந்துள்ளார்.

பாஜகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கபில் குஜ்ஜார், இந்துத்துவ சித்தாந்தத்தை வலுப்படுத்துவதற்காகப் பாஜக செயல்பட்டு வருவதாகவும், அதனால்தான் அவர் அதில் சேர்ந்தார் என்றும் கூறியுள்ளார்.

டெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

அவர் மேல்நோக்கி சுடும் காணொளி முதலில் வெளிவந்தபோது, ​​கபில் குஜ்ஜரின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு இருப்பதாகப் பாஜக கூறியது.

“டெல்லியில் ஒரு கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் திட்டம்” என்பது கபில் குஜ்ஜாரை பாஜகவுடன் இணைத்து மூலம் தெளிவாகத் தெரியவருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

“தேர்தலுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர், தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருந்தபோது, ​​அப்போதைய டெல்லி துணை ஆணையர், கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியுடன் ஒரு தொடர்பு வைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு, கஜில் குஜ்ஜார் ஒரு பயங்கரவாதி என்றும், அத்தகைய பயங்கரவாதிகளுக்கு ஆம் ஆத்மி அடைக்கலம் அளித்து வருவதாகவும் பாஜக தலைவர் ஜே.பி.நடா கூறினார். இன்று, ஆம் ஆத்மி கட்சியின்  ஒரு பயங்கரவாதியை ஏன் தங்கள் கட்சியில் இணைகிறீர்கள் என்று பாஜகவிடம் கேட்க விரும்புகிறேன்” என்று அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்