ஒரு புதிய மசோதாவின் வழியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பாஜக குறைக்க முயல்வதாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தேசிய தலைநகர் எல்லைப் பகுதி திருத்த மசோதா 2021-ஐ, மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்டும், ஒரு புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பாஜக குறைக்க முயல்கிறது. இந்த மசோதா அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு முரணாக உள்ளது. பாஜகவின் அரசியலமைப்புக்கு எதிரான ஜனநாயக விரோத போக்கை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
The Bill says-
1. For Delhi, “Govt” will mean LG
Then what will elected govt do?
2. All files will go to LG
This is against 4.7.18 Constitution Bench judgement which said that files will not be sent to LG, elected govt will take all decisions and send copy of decision to LG https://t.co/beY4SDOTYI
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 15, 2021
இந்த ”மசோதாவில், டெல்லியைப் பொறுத்தவரை அரசு என்பது துணை நிலை ஆளுநர் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அப்படி என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ன செய்யும்?” என்று அவர் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேச பக்தியை வைத்து அரசியல் செய்யக் கூடாது – பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
மேலும், அனைத்து கோப்புகளும் துணைநிலை ஆளுநரிடமே அனுப்பபடும் என்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள அவர், இது அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்புக்கு (4.7.18) எதிரானது, அந்த உத்தரவின் படி அனைத்து கோப்புகளும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கமே பரிசீலித்து, துணைநிலை ஆளுநருக்கு ஒரு நகலை அனுப்பும் என்கிற தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.