Aran Sei

மத்திய படையின் துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி: ஏழெட்டு பேரை சுட்டுக்கொன்றிருக்கலாம் என பாஜக கருத்து

மேற்கு வங்க தேர்தல் வாக்குபதிவின்போது, மத்திய ஆயுத காவல்படையான சிஐஎஸ்ஃப் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டது சரிதான் என்றும் தேவைபட்டால் ஏழெட்டு பேரைக்கூட கொன்றிருக்கலாம் என்றும் அம்மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க சட்டபேரவைக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி, இம்மாதம் 29 ஆம் தேதிவரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 10 ஆம் தேதி, கூச் பெஹர் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வாக்குபதிவின்போது, வாக்குசாவடிக்கு வெளியே மத்திய ஆயுத காவல் படையான சிஐஎஸ்ஃப் காவலர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே நடந்த தகராறின்போது, சிஐஎஸ்ஃப் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய படையின் துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : ‘உங்களின் ஒரு வாக்கு ஒரு தோட்டாவிற்கான பதிலடி’ – மம்தா

இதுகுறித்து, நேற்று முன்தினம் (ஏப்ரல் 11) பேசிய மேற்கு வங்க பாஜக மாநில தலைவர்,  “இதே போன்று குறும்புச் சிறுவர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க முயற்சி செய்தால், அடுத்த கட்ட தேர்தலிலும் கூச் பெஹரில் நடந்தது போன்ற துப்பாக்கி சூடுகள் நடக்கக்கூடும்.” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 12), வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவரான ராகுல் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியயுள்ளார்.

அப்போது, “அந்த குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சரிதான். மத்திய படைகள், சட்டத்திற்கு புறம்பான அவர்களின் இந்தச் செயலைத் தடுக்கும் முயற்சியில் தேவைப்பட்டால் மேலும் நான்கு பேரை சுட்டுக் கொன்றிருக்கலாம். ஏழு, எட்டு பேரை கூட சுட்டுக் கொன்றிருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் நடத்தை விதியை மோடி நடத்தை விதியென்று மாற்றுங்கள்’: தேர்தல் ஆணையத்தை பகடி செய்த மம்தா பானர்ஜி

இரு பாஜக தலைவர்களின் கருத்திற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “பாஜகவின் பாசிச முகத்தையே இக்கருத்துகள் காட்டுகிறது. இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்