Aran Sei

11 மாநில இடைத் தேர்தல் முடிவுகள் – பாஜகவின் வெற்றி தோல்வி

டந்த வாரம் 11 மாநிலங்களில் நடைபெற்ற 59 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 40 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று (நவம்பர் 10) இரவு 8 மணி வரையிலான முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 3 ஆம் தேதி, சட்டமன்ற இடைத் தேர்தல் நடந்த 28 இடங்களில் 19 இடங்களில் ஆளும் கட்சியான பாஜக வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலை வகித்துள்ளது. மீதமுள்ள ஒன்பது இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மார்வாஹி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.கே துருவ், பாஜக வேட்பாளர் டாக்டர் கம்பீர் சிங்கை விட 38,000 வாக்குகள் முன்னிலை வகித்துள்ளார்.

குஜராத்தில் நடந்த இடைத்தேர்தலில் எட்டு இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 34.34 சதவீத வாக்குகளையும் பாஜக 55.06 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரோடா தொகுதியில், பாஜக வேட்பாளரான முன்னாள் மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத்தை 10,566 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸின் இந்து ராஜ் தோற்கடித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தலா ஒரு இடத்தை வென்றுள்ளன.

கர்நாடகாவில் பாஜக இரண்டு இடங்களை வென்றுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா, காங்கிரஸில் இருந்து வெளியேறி, சென்ற ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவர் 60.14 சதவீத வாக்குகளுடன் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

மணிப்பூரில் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலை வகித்தது வருகிறது. அதே நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

நாகாலாந்தில் சுயேச்சை வேட்பாளர் டி.யாங்சியோ சாங்தம் 31.85 சதவீத வாக்குகளைப் பெற்று புங்ரோ கிஃபைர் தொகுதியிலும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர் மேடோ யோகா 41.11 சதவீத வாக்குகளைப் பெற்று தெற்கு அங்கமி 1 தொகுதியிலும் வென்றுள்ளனர்.

ஒடிசாவில், இரு இடங்களிலும் முதல்வர் நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தெலங்கானாவில் உள்ள துபக் தொகுதியில், பாஜக வேட்பாளர் மாதவனேனி ரகுநந்தன் ராவ், 1,079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்