Aran Sei

புதுச்சேரியில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரம் – பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

Image Credits: DNA India

புதுச்சேரியில்  தங்க இடமின்றி  பெட்ரோல் பங்க் ஓரமாகத் தூங்கிய  இளைஞரைப் பெட்ரோல் ஊற்றிக்  கொளுத்திய   பா.ஜ.க நிர்வாகி  உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர்   கைது செய்துள்ளனர்.

திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற    கூலித் தொழிலாளி புதுச்சேரி பகுதியில் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் தங்க இடமேதும் இல்லாதக் காரணத்தால்  மேட்டுப்பாளையம் பகுதியில்  இருந்த  பெட்ரோல் பங்க் அருகில் உறங்கச்  சென்றுள்ளார்.

பெகசிஸ் ஸ்பைவேர்: கண்காணிக்கப்பட்டார்களா தமிழ் தேசியர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர்கள்?

இந்நிலையில், அவர்  பெட்ரோல் பங்க் அருகில் தூங்குவதைப்  பார்த்த அந்த  பெட்ரோல் பங்க் உரிமையாளரும், அம்மாநில  பா.ஜ.க வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜ மவுரியா உள்ளிட்ட 7 பேர் சதீஷ்குமாரிடம் அவர் குறித்து  விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சதீஷ்குமாரின் தோற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்து  அவரைத் தாக்கியும்,  தொடர்ந்து, பெட்ரோல் பங்க்கில் இருந்து பெட்ரோலை  எடுத்து  வந்து அவரின்   மீது ஊற்றிக் கொளுத்தியும் உள்ளனர்.

விவசாய பெண்களின் நாடாளுமன்றம் : எங்களின் உணவை ஏன் அம்பானிக்கும் அதானிக்கும் விற்கிறீர்களென ஒன்றிய அரசிற்கு கேள்வி

இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்துத் தகவல் அறிந்த அப்பகுதி காவல்துறையினர்   பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 4 பேரைக் காவல்துறையினர்   கைது செய்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்