Aran Sei

‘அரசியல் லாபத்திற்காக காந்தியின் பெயரை உச்சரிக்கிறார் மோடி’ – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

ர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காந்திஜியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அவரின் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 2), ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்பூரில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “என்றைக்குமே மகாத்மா காந்தியை நினைவுக்கூறாதவர்கள், தற்போது அவரை நினைவுக்கூறத் தொடங்கியிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தன் அரசியல் லாபத்திற்காக மகாத்மா காந்தி பெயரை உபயோகித்துக்கொண்டிருக்கிறார்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

’கோட்சே ஜிந்தாபாத்’ – கோட்சேவைப் புகழ்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தலைவர்கள் காந்திய கொள்கைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அகிம்சையுணர்வு தங்களிடமிருந்து பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்றும் அசோக் கெஹ்லாட் கூறியுள்ளார்.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

மேலும், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றைதான். நீங்க காந்திஜியை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அவரின் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டால், இந்துத்துவாவால் ஏற்படும் பிரச்சனைகளும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சினைகளும் ஒரு முடிவு வரும்” என்று   அசோக் கெஹ்லாட் குறிப்பிட்டுள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்