Aran Sei

‘2019-2020-ல் பெருநிறுவனங்களிடமிருந்து 217 கோடி நிதியுதவி பாஜக பெற்றது’ – தேர்தல் ஆணையம் தகவல்

2019-2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாஜக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.785.77 கோடி நிதியுதவி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த கட்சியின் ஆண்டு பங்களிப்பு அறிக்கை வழியாக தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இது காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள நிதியுதவியை விட ஐந்து மடங்கு அதிகம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆண்டுக்கான பங்களிப்பு அறிக்கை கடந்த பிப்ரவரி 12 அன்று தாக்கல் செய்யப்பட்டதை நேற்று (ஜூன் 9) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையில் 20,000 அல்லது அதற்கும் மேல் நிதியுதவி அளித்தவர்களின் தகவல்கள் இடம் பெறும் என்றும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: மதவாத பாசிசத்தை எதிர்பவர்களை ஒடுக்கும் பாஜகவுக்கு கிடைத்த சவுக்கடி என வைகோ கருத்து

பாஜக பெற்றுள்ள ரூ.785.77 கோடியில் 217 கோடி ப்ரூடென்ட் எலெக்டோறல் டிரஸ்ட் அமைப்பிடம் இருந்து பெறப்பட்டதாகவும், அந்த அமைப்பு டி.எல்.எஃப் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், ஜி.எம்.ஆர் விமான நிலைய உருவாக்குநர்கள் இதர பெரும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

மேலும், ஜன்கல்யாண் எலெக்டோறல் டிரஸ்ட் அமைப்பு வழியாக ரூ.45.95 பெற்றுள்ளதாகவும் , இந்த அமைப்பு ஜே.எஸ்.டபுள்யூ தொழிற்நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றுள்ளதாகவும், மேலும், சமாஜ் எலெக்டோறல் டிரஸ்ட் மற்றும் ஏபி எலெக்டோறல் டிரஸ்ட்டிடம் இருந்து முறையே ரூ.3.75 மற்றும் ரூ.9 பெற்றுள்ளதாகவும் இவை ஹின்டால்க்கோ நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி பெற்றுள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாத பிரதமர்; உ.பி பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மோடி படம் – பாஜகவில் பிளவா?

இதே போன்று, காங்கிரஸ் கட்சி ரூ.139.01 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் ஆண்டு பங்களிப்பு அறிக்கை வழியாக தெரிய வந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 8.08 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.29 கோடி ரூபாயும் நிதி உதவியாக பெற்றுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்