Aran Sei

கேரளாவில் மதமாற்றம் மற்றும் சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக: இடது ஜனநாயக முன்னணிக்கு நெருக்கடியா?

credits : the indian express

ந்து மற்றும் கிறிஸ்துவ வாக்காளர்களைக் கவரும் விதமாக, லவ் ஜிகாத் மற்றும் சபரிமலை விவகாரத்தை கேரள பாஜக கையில் எடுத்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

லவ் ஜிகாத் சம்பவங்களுக்கு எதிராக சைரோ மலபார் கத்தோலிக்க தேவாலயம்  தீர்மானத்தை நிறைவேற்றியது. கேரள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஜேகப் பலக்கப்பள்ளி, ”மைய நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் லவ் ஜிகாத் என்பதை ஒரு மாயைப் போல கடந்து போகாமல், அந்தப் பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும்” எனவ வலியுறுத்தியிருந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்ணை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், என்எஸ்எஸ் (Nair Service Society) போன்ற அமைப்புகள் ஆளும் அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு, பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பெரும் வாய்ப்பாக பார்க்கப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

கேரள பாஜகவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், மத மறுப்பு திருமணம் எனும் பெயரில் மக்களை இஸ்லாமியர்களாக மதமாற்ற தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது கிறிஸ்துவர்களுக்கு எதிரான பெரும் பிரச்சனையாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து

கோட்டயம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், ”இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்துவதால், இடது ஜனநாயக முன்னணி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி) லவ் ஜிகாத் விவகாரம் தொடர்பாக வாய் திறக்கமாட்டார்கள்” என கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

இந்நிலையில், கேரள பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாராம்பரியமும் கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கனம் ராஜேந்திரன், “லவ் ஜிகாத் என்னும் வார்த்தை, இஸ்லாமிய வெறுப்பை பரப்புவதற்கு, சங் பரிவார் அமைப்பால் தொடங்கப்பட்ட ஒன்று” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை விவகாரம் என்பது தேர்தல் பிரச்சனை இல்லை என்றும், இந்த விவகாரத்தைத் தற்போது திட்டமிட்டு கையிலெடுக்கும் பாஜக, காங்கிரசின் சதி முறியடிக்கப்படும் என்றும் கூறியுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்