ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையங்களில் பிரதமரின் படம் இல்லையெனக்கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா பணியில் 15 ஊடகவியலாளர்கள் மரணம்: ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது ஒடிசா அரசு
இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் பிரதாப் சாரங்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையங்களில் மாநில முதலமைச்சரின் படம் உள்ளதே தவிர பிரதமரின் படம் இல்லை என்றும், இது ஒன்றிய அரசின் திட்டம் அதை முதலமைச்சரின் படத்தை வைத்து மாநில அரசின் திட்டம் போன்று கைப்பற்ற நினைக்கிறது என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
ஒடிசாவின் பலாஸோர் மாவட்டத்தில் உள்ள, கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையத்திற்கு முன்னர் பிரதமரின் பெரிய உருவப்படத்தோடு பாஜகவினர் போராடியதால், தடுப்பு மருந்து செலுத்துவதற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், பாஜகவின் போராட்டத்தையும், குற்றச்சாட்டையும் ‘கீழ்த்தரமான அரசியல்’ என்று விமர்சித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.