Aran Sei

தலித்தை முதல்வராக்குவோம் என பாஜக வாக்குறுதி – அரசியல் வித்தையென காங்கிரஸ் விமர்சனம்

தாங்கள் பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றால், தலித் சமூகத்தவர் ஒருவரை முதல்வராக்குவதாக பாஜகவும், துணை முதல்வராக்குவதாக சிரோமணி அகாலி தளமும் தெரிவித்துள்ளன.

நேற்று (ஏப்ரல் 14), பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “சிரோமணி அகாலி தளம் ஆட்சியமைத்தால், துணை முதல்வர் பதவி தலித் சகோதரர்களுக்கே வழங்கப்படும். தௌபாவில் அம்பேத்காரின் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் எங்கள் கட்சி பெருமை கொள்கிறது. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் கைகள் கட்டப்பட்டு 4 கிமீ நடக்க வைக்கப்பட்ட தலித் சிறுவர்கள் – வழக்கு பதியப்பட்டது

மறுபுறம், பாஜகவின் தேசிய செயலாளார் தருண் சுங்க், அடுத்த பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தால், தலித் ஒருவரே முதல்வராக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த வாக்குறுதிகள் குறித்து பேசிய  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்,  “இந்த வாக்குறுதிகள் எல்லாம் ஒரு அரசியல் வித்தைகள்தான். மாநிலத்தின் பட்டியல் சாதி மக்களின் நலனுக்காக அனைத்து திட்டங்களின் கீழும், பிரத்தியேகமாக குறைந்தது 30 சதவீத நிதியை அவர்களுக்கு ஒதுக்கும்.” என்று உறுதியளித்துள்ளார்.

தோராயகாம, பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவீதம் தலித் சமூகத்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்