Aran Sei

‘வேலை உறுதி அட்டை’ திட்டத்தைத் திரும்ப பெற்ற பாஜக : யூ-டர்ன் அடித்த பாஜக – திரிணாமுல் கேலி

Image Credits: The Wire

மேற்கு வங்காளத்தில், 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் 75 லட்ச இளைஞர்களுக்கு ‘வேலை வாய்ப்பு உறுதி’ அட்டைகள் வழங்கப்படும் என்று அக்கட்சி பிரச்சாரம் செய்துவந்தது. தற்போது இந்த வாக்குறுதியை பாஜக திரும்பப் பெற்றுள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரச்சாரம் டிசம்பர் 13 அன்று தொடங்கப்பட்டது.

‘பயங்கரவாதியை ஏன் பாஜகவில் சேர்த்துக்கொள்கிறீர்கள்?’ – ஆம்ஆத்மி கேள்வி

“‘வேலை’ என்ற வார்த்தையில் சிக்கல் உள்ளது. இந்த அட்டை இருந்தால் வேலை கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையில் செய்ய விரும்பியது வேலையின்மை அளவை அளவிடுவதற்கான ஒரு கணக்கெடுப்பு, பின்னர் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கொள்கையை வடிவமைப்பு. இத்திட்டத்தில் ‘வேலை’ என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதால், வேலைகளை வழங்குவதற்கு அரசு பொறுப்பேற்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளன, சிலர் தங்கள் தொழில்களைத் தொடங்கலாம்” என்று பாஜக மாநிலத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலீப் கோஷ் தி வயர் இணையதளத்திடம் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கும்போது, ​​அடுத்த சில மாதங்களில், 294 சட்டசபை தொகுதிகளிலும் பரவியிருக்கும் இளைஞர்களுக்கு ‘வேலை வாய்ப்பு உறுதி’ அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று பாஜக கூறியது. 2021-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றும்  தெரிவித்தது.

பாஜக கூட்டணியில் குழப்பம்? : ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பாஜக அழிப்பதாக குற்றச்சாட்டு

வாக்குறுதி திரும்பப் பெறப்பட்டுள்ளதை குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகாத ராய், “தற்போது பாஜக அடித்திருக்கும் யு-டர்னின் மூலம் அக்கட்சி வெறும் வார்த்தைஜாலங்களால் ஆனது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அவர்களின் இளைஞர் அணி தலைவர் இந்தப் பயனற்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரும்பாலான தலைவர்கள் இதனை எதிர்த்தனர், எனவே அவர்கள் இதை நிறுத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்