Aran Sei

பாஜக எதிர்ப்பு கட்சிகளே ஒன்று கூடுங்கள் : சிவ சேனா அழைப்பு

‘காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது, சிவ சேனா உட்பட, பாஜகவை எதிர்க்கும்  அனைத்து அமைப்புகளும்  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கீழ் ஒன்று கூட வேண்டும்’ என சாம்னா பத்திரிக்கை தெரிவித்துள்ளதாக தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தியாவின் தலைநகரின் எல்லையில், விவசாயிகளின் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டெல்லியில் உள்ள தலைவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. அரசின் அலட்சியப்போக்கிற்கு காரணம் பலவீனமான எதிர்க்கட்சிதான். எதிர்க்கட்சி பலவீனமாக இருப்பதால் ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது” என சிவ சேனாவின் பிரச்சார பத்திரிக்கையான சாம்னா தெரிவித்துள்ளது.

உணவு விடுதியை முற்றுகையிட்ட விவசாயிகள் : பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்ற பாஜக தலைவர்கள்

காங்கிரஸ் ஒரு வலிமையான எதிர்கட்சியாக இல்லை என்று குற்றம்சாட்டும் சாம்னா, “ராகுல் காந்தி தனி நபராக போராடுகிறார். ஆனாலும், ஏதோ ஒன்று குறைகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது ஒரு அரசு சாரா அமைப்பை போல இயங்கி கொண்டிருக்கிறது” என்றும் கூறுகிறதென தி இந்து தெரிவிக்கிறது.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

மேலும், “திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா, அகாலி தால், பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ், ஜகன்மோஹன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கானாவின் கே.சந்திரசேகர், ஒடிசாவின் நவீன் பட்நாயக், கர்நாடகாவின் ஹெச்.டி.குமாரசாமி என பலர் பாஜகவிற்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பங்காக இல்லை. அவர்கள் கூட்டணியில் இணைந்தால் மட்டும்தான் எதிர்கட்சி ஒரு வலிமையான மாற்றுக்கட்சியாக இருக்கும்” என்றும் சாம்னா தெரிவித்துள்ளது.

பாஜகவினரால் தாக்கப்பட்ட நீர்வளத்துறை அலுவலகம் : விவசாயிகளுக்கு ஆதரவளித்தால் பழிவாங்கிய பாஜக

ப்ரியங்கா காந்தி டெல்லியில் கைது செய்யப்பட்டதும், ராகுல் காந்தி பாஜகவால் கேலிக்கு ஆளானதும், மஹாராஷ்டிராவில் தாக்கரே அரசாங்கத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

“தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டுமே இருப்பது போல, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸை தவிர வேறு யாரும் இல்லை. ஆனால், பாஜகவிற்கு நரேந்திர மோடியின் அதிகாரம் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதுவும் இல்லை. காங்கிரஸ் இந்த பிரச்சினைகளை கவனிக்கவில்லை என்றால், அனைவரின் எதிர்காலமும் கடினமாகவே இருக்கும்” என்று சிவ சேனாவின் சாம்னா பத்திரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.