Aran Sei

’ஒத்த எண்ணம் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி உறுதி’ – பாஜக தேசியத் தலைவர் அறிவிப்பு

ரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வந்துள்ளார். நேற்று (ஜனவரி 30) இரவு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “பாஜக நடத்திய வேல் யாத்திரை இரண்டு வெற்றிகளைத் தந்துள்ளது. முதலாவது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையில் வேல் எடுத்தது. மற்றொன்று, தைபூசத்திற்கு தமிழக அரசு பொதுவிடுமுறை வழங்கியது. இதற்காகத் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேல் யாத்திரை முருகனும் கொல்லப்பட்ட முருகேசன்களும்

மேலும், “வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக  போட்டியிடும். ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். அதற்காகப் பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கப் பாஜகவை வலுப்படுத்த வேண்டும்.” என்று ஜே.பி.நட்டா வலியுறுத்துயுள்ளார்.

கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்