Aran Sei

‘மம்தாதான் இந்தியாவின் ஒரே தலைவர்’ – திரிணாமூலுக்கு திரும்பிய பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் புகழாரம்

பாஜகவின் தேசிய துணைத் தலைவரான முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதோடு, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார் என்றும் புகழ்ந்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்தக்கட்ட தலைவர்களில் ஒருவராக, பொதுச் செயலாளர் பதவியில் இருந்தவர் முகுல் ராய். மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, அவருக்கு பாஜக தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், முகுல் ராய் பாஜகவில் இருந்து மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வந்துக்கொண்டிருந்தது.

மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்த அரசியல் நகர்வு – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

இந்நிலையில், நேற்று (ஜூன் 11), கல்கத்தாவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து, திரிணாமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முகல் ராய், “பாஜகவுக்குச் சென்ற பின்னர், தற்போது மீண்டும் என்னுடைய பழைய சகாக்களைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் பாஜகவில் இருக்க முடியாது. யாராலுமே பாஜகவில் இருக்க முடியாது. மம்தா பானர்ஜியுடன் எப்போதுமே எனக்கு எந்த முரண்பாடும் இருந்ததில்லை. அவர் மேற்கு வங்கத்திற்கும்  இந்தியாவிற்கும் ஒரே தலைவர்.” என்று புகழுரைத்துள்ளார்.

Source; ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்