Aran Sei

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

க்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதியதில் நான்கு விவசாயிகள் பலியானது குறித்த காணொளி ஒன்றை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி பகிர்ந்ததோடு, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.

இக்காணொளியின் உண்மைத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

நேற்று முன் தினம் (அக்டோபர் 3), உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

‘ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறி, பாஜக படுகொலை ராஜ்ஜியம் நடத்துகிறது’ – மம்தா குற்றச்சாட்டு

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 5), தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ள வருண் காந்தி, “லக்கிம்பூர் கேரியில் வேண்டுமென்றே விவசாயிகள்மீது வாகனங்கள் மோதிச் செல்லும் இக்காட்சியை காணும் எவருடைய உள்ளமும் பதறும். இந்தக் காணொளியைக் காவல்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், அவ்வாகணங்களில் இருந்தவர்கள், சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் என அனைவரையும் அடையாளம் கண்டு, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.” என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்