Aran Sei

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் – வெளிநடப்பு செய்த பாஜக எம்பிக்கள்

சினிமா தணிக்கை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது குழு கூட முடியாது எனப் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

‘என்னை தேசதுரோகியாக சித்தரிக்க லட்சத்தீவு நிர்வாகம் முயல்கிறது’ – காவல்துறையின் குற்றச்சாட்டிற்கு திரைக்கலைஞர் ஆயிஷா மறுப்பு

வெளிநடப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து பாஜக உறுப்பினர்களின் முறைசாரா கூட்டத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பூபேஷ் யாதவ் அழைப்பு விடுத்தார் என்றும், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்றும் செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக பேசிய அவர், “அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து அமைச்சரைச் சந்திக்க வருமாறு, எனக்கு அழைப்பு வந்தது. நான் எந்தச் சந்திப்பையும் கோராததால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது தொடர்பாக அழைத்தவடரிடம் தெரிவித்தும், அவர் மதியம் 2 மணிக்கு அமைச்சரைச் சந்திக்குமாறு வலியுறுத்தினார்” எனக் கூறினார்.

கொரோனாவால் சுற்றுலாத் துறையில் 2 கோடி பேர் வேலையிழப்பு – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் அலுவலகத்தை நான் அடைந்தபோது, அவரைப் பார்த்து அமைச்சர் ஆச்சரியப்பட்டார் எனக் கூறிய நடராஜன், ”நீங்கள் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவில் இருக்கிறீர்களா எனக் கேட்டார். நான் ஆம் என்றதும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் எனக் கேட்டார். அதற்கு நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வருகிறேன் எனக் கூறியபோது, அவர் மன்னிப்பு கோரினார், இது பாஜக உறுப்பினர்களுக்கான கூட்டம் என்று அவர் கூறினார்” எனத் தெரிவித்தார்.

கூட்டத்தைப் பாஜகவினர் புறக்கணித்தது தொடர்பாக, ”கூட்டம் தொடர்பாக எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை, மேலும் கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடைபெற்றுக் கொண்டுருந்ததால், எங்களால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. நாங்கள் மக்களவை சபாநாயகரிடம் செல்கிறோம்” எனப் பாஜகவை சேர்ந்த நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.

‘பெகசிஸ் விவகாரம் நாளுக்குநாள் பெரியதாகவும், அச்சுறுத்தலாகவும் வளர்கிறது’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மேலும், இன்று (28.07.2021) நடைபெறவிருக்கும் பெகசிஸ் தொடர்பான கூட்டத்திலும் பாஜக எம்.பிக்கள் பங்கேற்க மாட்டார்கள் என துபே கூறினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்துறை அமைச்சகம், மின்ன்ணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையிலும், சினிமா தணிக்கை திருச்ச சட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன், திரைப்பட தணிக்கைத் வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்