Aran Sei

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் – உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு வருண் காந்தி கடிதம்

த்தரப்பிரதேச மாநில  விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்குமுன்னர், முசாபர் நகரில் நடந்த விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டம் குறித்து தெரிவித்த வருண் காந்தி,   “லட்சக்கணக்கான விவசாயிகள் முசாபர் நகர் பகுதியில் போராடுவதற்காகக் கூடியுள்ளனர். அவர்கள் நம் ரத்தமும் சதையுமானவர்கள். நாம் கண்ணியமான முறையில் மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் தொடங்க வேண்டும்”   என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், யோகி ஆதித்ய நாத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் விவசாய நிதியில் வழங்கப்பட்டு வரும் தொகையானது இரட்டிப்பாக, மாநில அரசின் கூடுதல் நிதி பங்களிப்போடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கரும்பிற்கு மாநில அரசு உறுதியளித்துள்ள தொகையை ஒரு குவிண்டாலுக்கு 400 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டும்மல்லாது, நெல் மற்றும் கோதுமை கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2௦௦ ரூபாய் கூடுதலாக வழங்கவேண்டும் என்றும், உயர்ந்துள்ள மின் கட்டணம் விவசாயிகளின் அழுத்தத்தை கூட்டியுள்ளது என்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கோரியுள்ளார்.

Source: The indian express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்