Aran Sei

‘கார்ப்ரேட்டுகளால் நிலம் பறிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்’ – விவசாய சட்டத்திற்கு ஆதரவாக பாஜக எம்.பி உறுதி

விவசாய சட்டங்களால் விவசாயி ஒருவரின் நிலம் கார்ப்பரேட்டுகளால் பிறிக்கப்பட்டால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முசாஃபர்நகர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் பால்யன் உறுதியளித்துள்ளார்.

நேற்று (மார்ச் 6), உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள ராஜ்கியா இன்டர் கல்லூரியில் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய சஞ்சீவ் பால்யன்,  இந்த மூன்று விவசாய சட்டங்களால் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் என்று வதந்தி பரவுகிறது என்றும், ஒருவேளை கார்ப்பரேட்கள் விவசாயி ஒருவரின் நிலத்தைப் பறித்தால், அதற்கு எதிராக ராஜினாமா செய்யும் முதல் நபராக நான் இருப்பேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நூறாவது நாளில் விவசாயிகள் போராட்டம்: ‘ராணுவ வீரர்களின் தந்தைகளுக்கு ஆணிக்கம்பளம் விரிக்கும் மத்திய அரசு’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மேலும் அச்செய்தியில், “இந்த வதந்தியை யாரும் பரப்பாதீர்கள். விவசாயிகள் பேசப்பட வேண்டிய பிரச்சினைகள்குறித்து பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அச்சட்டங்களை விவசாய விரோத சட்டங்கள் என்று அழைத்தால், அவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன். நாம் அதுகுறித்து விவாதிப்போம்.” என்று சஞ்சீவ் பால்யன் கூறியுள்ளார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக மேற்கு உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியாக விவசாயிகள் பஞ்சாயத்துகள் நடந்துவரும் நிலையில், இந்த நிகழ்ச்சி அச்சட்டங்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டதாகும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்