Aran Sei

‘புதுப்பிக்கப்பட்ட நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர்’- பிரக்யா தாக்கூர் கோரிக்கை

credits : indian express

த்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை வைக்க வேண்டும் என்று போபால் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக தலைவருமான பிரக்யா சிங் தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரும் நவம்பர் 15-ம் தேதி, ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையம் போன்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

இதுதொடர்பாக, ட்வீட் செய்துள்ள பிரக்யா சிங் தாக்கூர், “15/11/2021 அன்று வருகை தரும் பிரதமர் மோடி, ‘ஜனஜாதி கௌரவ்’ நாளில் பங்கேற்பது போபாலுக்கு ஒரு நல்ல சகுனம். ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்ஜியின் வைக்க வேண்டும் என்கிற எனது பழைய கோரிக்கையை மோடி ஜீ நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

போபால் பயணத்தின்போது, ​​பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பழங்குடியினர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்