Aran Sei

சத்தீஸ்கரில் பாஜக மாநிலங்களவை உறுப்பினரிடம் மோசடி – ரூ. 37 ஆயிரத்தை ஏமாற்றிய மர்ம நபர்

த்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மாநில அமைச்சருமான ராம் விச்சார் நேதமின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ, 37 ஆயிரம் மோசடி நடைபெற்று இருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேதமின் உறவினர், ராய்ப்பூரில் உள்ள தெலிபந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியை விமர்சித்ததால் ட்விட்டர் அனுப்பிய நோட்டீஸ் – கார்டூனிஸ்டை பணியிடை நீக்கம் செய்த நியூஸ் 18 நிர்வாகம்

நேதம் பெயரில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தியுள்ள அந்த மோசடி நபர், இந்திய மதிப்பில் ரூ. 36,844க்கு பரிவர்த்தனை செய்திருப்பதாகவும், இந்தப் பரிவர்த்தனை இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்று இருப்பதாகவும், தெலிபந்தா காவல்நிலைய அதிகாரி சோனல் க்வாலா கூறியுள்ளார்.

”நேதமின் கிரேடிட் கார்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காலாவதியாகி விட்டது. இதனால் அதனை அழித்துவிட்ட அவர், அதனை புதுப்பிப்பதற்காக எந்த கோரிக்கையும் வங்கியிடம் வைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

”நேதமின் அனுமதி இல்லாமல் மற்றும் அவருக்கே தெரியாமல் அவரது கிரெட் கார்ட்டை புதுப்பித்துள்ள அடையாளம் தெரியாத அந்த மோசடி நபர், அதன் மூலம், 508.92 அமெரிக்க டாலர் மதிப்பாலான பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ. 45,668 (வரி மற்றும் வட்டி சேர்த்து) “என சோனல் க்வாலா குறிப்பிட்டுள்ளார்.

”துவக்கத்தில் இந்த பரிவர்த்தனை தன்னால் செய்யப்படவில்லை என்றும், காலாவதியான கடன் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்றும் அவர் கூறிவந்த நிலையில், வங்கியிலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததை அடுத்து வங்கிக்கு நேரடியாக சென்றுள்ளார். அங்கு அவருக்குப் பரிவர்த்தனை தொடர்பான முழு விவரங்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் புகார் அளித்துள்ளார்” என நேதம் கூறியுள்ளார்.

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக தெலிபந்தா காவல்நிலைய அதிகாரி சோனல் க்வாலா தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்