Aran Sei

‘தாஜ்மகாலுக்கு ராம் மகால் என்று பெயர் மாற்றப்படும்’ – பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலாக இருந்தது என்றும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை தாஜ்மஹாலாக மாற்றினார்கள் என்றும் பாஜகவை சேர்ந்த உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் கூறியுள்ளார்.

நேற்று (மார்ச் 14), அம்மாநில பல்லியா மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், “தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலாக இருந்தது. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் இந்திய கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். அதற்காகவே, சிவன் கோயிலை தாஜ்மஹாலாக மாற்றினார்கள். ஒரு பொன்னான வாய்ப்பாக, சிவாஜி மகாராஜாவின் சந்ததியினர் உத்தரபிரதேசம் வந்தனர்.” என்று தெரிவித்துள்ளதாக அவுட்லுக் செய்தி வெளியிட்டுள்ளது.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

மேலும், “சமர்த் குரு ராம்தாஸ் சிவாஜியை இந்தியாவுக்குக் கொடுத்தது போல, கோரக்நாத் ஜி யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ் விரைவில், தாஜ்மகாலின் பெயர் ராம் மகால் என்று மாற்றப்படும்.” என்று சுரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்