”மத நம்பிக்கை கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் பரல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், கொரோனோ விதிமுறைகளை முற்றிலும் மீறி நடைபெற்று வரும் கும்பமேளா, உலகளவில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
கும்பமேளா சென்று திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராடியுள்ளனர், இதனால் ஹரித்துவாரில் கொரோனா தொற்று பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது.
#TrendingTonight | “Covid situation is not good. But linking it to Markaz and comparing it to Kumbh is wrong. All Covid norms are being followed in Haridwar”: Sunil Bharala, BJP Leader, on Kumbh vs Markaz Masjid debate pic.twitter.com/iALZfjenvV
— NDTV Videos (@ndtvvideos) April 14, 2021
இந்நிலையில், ஹரித்துவாரில் நடந்த மத நிகழ்வுக்காக கூடிய கூட்டத்தை ஆதரித்து உத்தர பிரதேச பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சுனில் பரல்லா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில், ”தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலை மோசமாக உள்ளது. ஆனால், கும்பமேளாவை தப்லிகி ஜமாத்துடன் ஒப்பிடுவது தவறு. ஹரித்துவாரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத நம்பிக்கை கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றும் கங்கை தாய் கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துச் சண்டையிடுவாள் என்றும் அவர் கூறியுள்ளார்.
शुरुआती लक्षण दिखने पर आज मैंने Antigen कोरोना जांच करवाई। जिसकी रिपोर्ट पॉजिटिव आयी है। मैंने अपने आप को आइसोलेट कर लिया है।
पिछले दिनों में मेरे संपर्क में आने वाले सभी लोगों से निवेदन है कि आप भी अपनी जांच करवा लें।#COVID19 #Covid19Positive— Pt Sunil Bharala (@sunilbharala) April 13, 2021
இந்நிலையில், கும்பமேளா சென்று வழிபாடு செய்த அவர், அதற்கு அடுத்து நாள் தனக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், தான் தனிமைப்படுத்தி கொண்டிருக்கின்றேன் எனவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.