Aran Sei

பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது – கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ மகள் பணி இடைநீக்கம்

திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

திரிபுராவில் அன்னிந்திதா போவ்மிக் என்ற இயன்முறை மருத்துவர் (physiotherapist) ஆளும் பாஜக ஆட்சியின் ஊழல்குறித்து பதிவிட்டதால் அவர் வேலைபார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’ஆன்லைன் ஊடகத்தின் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ – பிரதமருக்கு பத்திரிகையாசிரியர் சங்கம் கோரிக்கை

பாஜக கட்சியைச் சேர்ந்தவரும் பெலோனியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அருண் சந்திரா போவ்மிக்கின் மகள் அன்னிந்திதா போவ்மிக் ஆவார்.

பணிஇடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து தெரிவித்துள்ள அன்னிந்திதா போவ்மிக், “சென்ற இடது முன்னணியின் ஆட்சியிலும் அரசுக்கு எதிராகச் சமூக தளங்களில் கருத்து தெரிவித்தால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால் இப்போதிருக்கும் பாஜக ஆட்சியில் நிலைமை மிக மோசமாக உள்ளது. முகநூலில் பதிவிட்டதுக்கே நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளேன்” என்று தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

அன்னிந்திதா பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் சிடி ஸ்கேன் வாங்குவதில் நடந்த ஊழல்குறித்து அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 24 அன்று தனது முகநூல் பக்கத்தில் அன்னிந்திதா வெளியிட்டிருந்த பதிவில், முறையான ஏலம் விடப்படாமல் சட்டவிரோதமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது என்று அவர் வேலைபார்க்கும் நிறுவனத்தில் நிலவும் ஊழல்குறித்து பதிவிட்டிருந்தார்.

“சிறை அல்ல பிணை” என்பது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தாது – மாவோயிஸ்ட் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து

இந்நிலையில் இந்தப் பதிவை நீக்கும் படி அவர் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தி வந்ததாகவும் ,அந்தப் பதிவை அவர் நீக்க மறுத்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அன்னிந்திதா போவ்மிக்,கருத்து சுதந்திரத்திற்கே பாஜக ஆட்சியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்