Aran Sei

’அரசின் மெத்தனத்தால் பலியான 40 குழந்தைகள்’ – பாஜகவை குற்றஞ்சாட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்

த்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 40  குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மனிஷ் அசிஜா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் துயரத்திற்கு மாநில சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தான் காரணமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அசிஜா, “கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. இன்று காலை ஆறு குழந்தைகளின் இறப்பு செய்தியைக் கேட்டேன்”  என்றும் தெரிவித்திருந்தார்.

இதில் பெரும்பாலான குழந்தைகள் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும், கொசுக்களின் எண்ணிகையைக் கட்டுபடுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித் தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர், “இந்தச் செய்தி தவறானது. அப்படி எந்த இறப்பும் பதிவாகவில்லை” என்று கூறியிருந்தார்.

அதேவேளையில்,மதுரா பகுதியில் உள்ள கொஹ் கிராமத்தில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த ஒன்பது பேரில் 8 குழந்தைகளும் அடங்கும்.

பாராஹ் பகுதியில் உள்ள சமுக சுகாதார நிலையத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர் பாருள் மிட்டல் இந்த இறப்புகளை உறுதிபடுத்தியுள்ளார்.

 

source:தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்