உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவரான நவீன் ஞான கவுடரின் உடலைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, 10 பேரை விமானத்தில் கொண்டு வரலாம் என்ற பாஜகவைச் சேர்ந்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் பெல்லாட்டின் கருத்துக்கு மக்கள் மத்தியில் கண்டனம் எழுந்துள்ளது.
நேற்று (மார்ச் 3), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அரவிந்த் பெல்லாட், “உயிருடன் இருக்கும் மக்களை மீட்பது ஒரு கடினமான பணியாக இருக்கும் நேரத்தில், ஒரு உடலை தாக்குதல் நடக்கும் பகுதியிலிருந்து இங்கு கொண்டு வருவது மிகவும் கடினமான பணி. இருந்தபோதிலும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரால் ஒரு வாரத்தில் அகதிகளான 10 லட்சம் மக்கள் – ஐ.நா., தகவல்
“போர் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில் இருந்து மக்களை விமானத்தில் ஏற்றுவது சவாலான காரியம். இங்கிருந்து இறந்தவரின் உடலை மீட்டெடுப்பது மிகவும் கடினம். மேலும், இறந்தவரின் உடலை விமானத்தில் வைப்பதற்கு தேவைப்படும் இடத்தில், உயிருடன் இருக்கும் பலருக்கு இடமளிக்க முடியும்” என்று அவர் அரவிந்த் பெல்லாட் கூறியுள்ளார்.
Source: New Indian Express
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.