பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நந்த் கிஷோர் “நனே ஒரு விவசாயிதான். ரகேஷ் திகாய்த் என்னை விட பெரிய விவசாயி இல்லை. நான் வைத்திருக்கும் நிலத்தில் பாதி அளவு கூட அவரிடம் இல்லை. திகாய்த் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டின் விவசாயிகளிடையே பிளவை ஏற்படுத்தக் கூடாது” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்பட முயன்றதாக நந்த் கிஷோர் மீது விவசாயிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அந்த குற்றச்சாட்டை மறுத்த நந்த் கிஷோர் “இது விவசாயிகளின் போராட்டம் என்று யார் சொன்னது?. இன்று, அரசியல் கட்சி தொண்டர்கள் மட்டும்தான் அங்கே அமர்ந்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Nand Kishore Gujar , the @BJP4UP MLA from Ghaziabad , accused by farmers of trying to break up the Ghazipur protest last week (he denies) attacks @RakeshTikaitBKU , saying the BKU leader is not a bigger farmer than him . and more … pic.twitter.com/wUBEs31Vc5
— Alok Pandey (@alok_pandey) February 3, 2021
“திகாய்த் குடும்பம் மீது எனக்கு மரியாதை உள்ளது, ஆனால், 2000 ரூபாய்க்காக அவர் எங்கு வேண்டுமானாலும் செல்வார் என்று மக்கள் சொல்லக் கேட்டுள்ளேன்” என்று நந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போராட்டம் நடைபெறும் சிங்கு, திக்ரி, காசியாபாத் எல்லைகளில், டெல்லி காவல்துறை, கான்கீரீட் மற்றும் முள்வேலியால் பலமான தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக் களத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடியர தினத்தன்று நடைபெற்றதுபோல், தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் வந்துவிடாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று காவல்துறை தெரிவித்துள்ளதாக என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.