விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக வெளியிட்ட போஸ்டரில் உள்ள விவசாயி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் என்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, பஞ்சாப் பாஜக தனது முகநூல் வெளியிட்ட போஸ்டரில் இடம்பெற்ற ஹர்ப்ரீட் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். டிசம்பர் முதல் வாரம் முதல் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பலத்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, அந்தப் போஸ்டர் பாஜக முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ட்ராலி டைம்ஸ் – விவசாயிகளின் போராட்டக்களத்தில் உருவான பத்திரிகை
‘ஹார்ப் விவசாயி’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஹர்பிரீத் சிங், புனேவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள நடாலோன் என்ற அவரது கிராமத்தில் அவரது குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது.
Besharmi Di Vi Koi Hadd Hundi Ae
Par Lagdaa Inaa Kol JIO De Unlimted Internet Waang Ina Kol Besharmi Di Hadd Vi Unlimted ae. Inaa Nu Dasso Innaa Daa Bhaapa Singhu Baithaa. Yadde Modi With Farmers De. #ShameOnBJP #ModiAgainstFarmers#supportfarmers #IndiaSupportFarmerProtest pic.twitter.com/JRwVTonoer— Harp Farmer (@harpfarmer) December 22, 2020
விவசாயிகள் போராட்டத்தை ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதையொட்டி, வெளியிடப்பட்ட அவரது புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
குளிரிலும் மழையிலும் போராடும் விவசாயிகள் – கூடார நகர் உருவாக்கம்
“நான் முதலில் அந்த போஸ்டரைப் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் பின்னர் கோபமடைந்தேன். எப்படி இவர்கள் உணர்ச்சியற்றவர்களாக இருக்க முடியும்? சிறு விவசாயியின் வலியை நான் நன்கு அறிவேன். அவர்களை காலிஸ்தானியர்கள் என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் சொல்வது அதிர்ச்சியளிக்கிறது.” என்று ஹர்பிரீத் சிங் கூறியுள்ளதாக ட்ரிபுன் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், “பாஜக தனது பேஸ்புக் பக்கத்தில் என் படத்தைப் பயன்படுத்தியிருக்கிறது என்று என் கிராமத்தில் உள்ள நண்பரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் நான் சிரித்தேன். ஆனால் பின்னர் நான் வருத்தப்பட்டேன். என் அனுமதியின்றி அவர்கள் அதை எப்படி பயன்படுத்த முடியும்? என் படத்தை எடிட் செய்த, அந்த தொழிற்நுட்ப கலைஞர் கூட இதற்கு கவலைப்படவில்லை. இணையத்தில் உள்ள என் படங்களிலிருந்து இதைப் எடுத்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம் – போராடும் விவசாயத் தலைவர்களுக்கு ரூ 50 லட்சம் நோட்டீஸ்
“விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்கள் ஏன் டெல்லி எல்லைகளில் போராடிக்கொண்டிருக்கிறார் என்று நான் அரசிடம் கேட்க விரும்புகிறேன். பெண்கள் உட்பட வயதானவர்கள், டிசம்பரின் குளிரில் ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறார்? விவசாய சட்டங்களை மத்திய அரசு ஏன் திரும்பப் பெற முடியாது என்று சொல்கிறது? இது ஈகோ பிரச்சினையே தவிர வேறு ஒன்றும் இல்லை.” என்று ஹர்ப்ரீட் சிங் விமர்சித்துள்ளதாக ட்ரிபுன் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.