Aran Sei

அரசியல் லாபத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் பாஜக – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

பாஜக தனது அரசியல் லாபத்திற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனவே சமாஜ்வாதி கட்சியினர்  வாக்குசாவடிகளை கண்காணித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சித் தொண்டர்கள் நேரத்தை வீணாக்காமல் பணிபுரிய வேண்டுமெனவும் அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “ஜனநாயகத் திருவிழாவானத் தேர்தலைக் காப்பாற்றும் வகையில், சமாஜ்வாதி கட்சியினர்  கவனத்தோடும், உறுதியான திட்டத்தோடும் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் மட்டும்தான் பாஜக மக்களை ஏமாற்ற முடியாது”  என்று கூறியுள்ளார்.

மேலும், கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசின் வளர்ச்சி என்று  விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு முதலமைச்சர் ஆதித்யநாத்தை விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், எங்கு நல்ல பணிகள்  நடைபெற்றிருந்தாலும் அது தங்களுக்குச் சொந்தமானது என்று உரிமைகொண்டாட பாஜக தயங்குவதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்