Aran Sei

பாஜகவின் தேர்தல் அறிக்கை ”வெற்று தேர்தல் அறிக்கை” : மக்கள் பாஜகவின் வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள் – செளகாதா ராய்

மேற்கு வங்கத்தில் பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை, ”வெற்று தேர்தல் அறிக்கை” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகாதா ராய் குற்றம் சாட்டியுள்ளதாக என்.டி .டி வி செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், நேற்றைய தினம் (21-3-21), முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக சாடியுள்ள சௌகாதா ராய் , “குஜராத்தை சேர்ந்தவர் மேற்கு வங்க பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார், தேர்தல் அறிக்கையை வெளியிடும் அளவுக்கு தகுதியுடைய ( வங்கத்தைச் சேர்ந்தவர் ) ஒருவர் கூடவா மேற்கு வங்க பாஜகவில் இல்லை? இது வங்க மக்களை அவமதிக்கும் செயல்” என்று கூறியுள்ளதாக என்.டி .டி வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் சிஏஏ அமல்படுத்தப்படும் ” – மேற்கு வங்காள தேர்தல் அறிக்கையில் பாஜக

மேலும், ”கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வெளியிட்ட அறிவிப்புகளான, 15 லட்சம் பணம் வங்கிகணக்கில் செலுத்தப்படும் ,2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கின்ற அறிவிப்புகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியிருக்கிறார்களா?” என்று சௌகாதா ராய் கேள்வியெழுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் : திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச கல்வி குறித்து பேசிய அவர், ”பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறதா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்

‘எழுவர் விடுதலை, மதுவிலக்கு, மாநில நலன்’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பேசிய ராய், “பாஜக பெண்களுக்கு மாநில அரசுப் பணிகளில் 33% இடஒதுக்கீடு தருவதாகக் கூறுகிறார்கள்.ஆனால், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு ஏன் 33% இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜகவின் ”மிளிறும் வங்கம்” குறித்து பேசிய சௌகாதா ராய், ” முதலில் அவர்கள் தங்க உத்தரபிரதேசத்தையும், தங்க மத்திய பிரதேசத்தையும் அமைக்கட்டும் பின் தங்க வங்கத்தை உருவாக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும், பாஜகவின் வாக்குறுதிகளை யாரும் நம்பமாட்டார்கள் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகாதா ராய் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்