அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்.
அசாம் மாநிலத்தில் வருகின்ற மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘அசாம் பாஜகவின் சகுனிகளும் திருதராஷ்டிரர்களும் மக்களுக்கு துரோகமிழைக்கிறார்கள்’ – பிரியங்கா காந்தி
இந்த அறிக்கைகுறித்து பேசிய ஜே.பி.நட்டா, மருத்துவம் ,கல்வி, பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் மாநிலங்கள் – முக்கியமான தணிக்கை அறிக்கைகள் மக்களுக்குக் கிடைக்கவில்லை
மேலும், அசாம் மாநிலத்தில் திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும் எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
#10SankalpforAxom – to protect Assam's rights through corrected NRC.
A process of correction and reconciliation of entries under the SC mandated NRC will be initiated in a structured manner to protect genuine Indian citizens and exclude all illegal immigrants. pic.twitter.com/vU7M6lmqZ4
— Ranjeet Kumar Dass (@RanjeetkrDass) March 23, 2021
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டுவரப்படும் எனவும், உச்சநீதிமன்ற வழிகாட்டலின் படி மறுபரிசீலனை செய்யப்பட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.