எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே உள்ள பிரச்சினை தனிப்பட்ட பிரச்சனைதான். அது எல்லாருக்குமே தெரியும். அதிமுகவுக்கு பாஜக அரசு பல்வேறு சூழ்நிலைகளில் நட்புடன் ஆதரவு அளித்தது மட்டுமில்லாமல், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதும் பாஜக அரசு தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். பொதுவாக அதிமுகவில் ஒவ்வொரு தலைவர்களின் மறைவுக்கு பின்னரும் இது போன்ற பிரச்சினை ஏற்படுவது வழக்கம் தான். அப்பொழுது ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் இந்த மாதிரி சிறு சிறு பிரச்சனைகள், சலசலப்புகள் தோன்றும். பின்னர் சரியாகிவிடும். அதுமாதிரிதான் இது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக எந்த எல்லைக்கும் போகும் Jenram Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.