Aran Sei

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறதா பாஜக? – ராஜஸ்தானில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள்

ஸ்ஸாமில் காங்கிரஸ் கூட்டணியைச் சார்ந்த 22 வேட்பாளர்களைத் தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக தங்கள் கூட்டணிக்கு இழுக்கக்கூடும் என்பதால் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “

அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணியின் தலைவர் மவுலானா பத்ருதீன் அஜ்மல் தலைமையில் 22 பேர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள பத்ருதீன் அஜ்மல், “அசாம் தேர்தல் நாங்கள் வெற்றி பெற தொடங்கியதும் பாஜக எங்களை தங்கள் பக்கம் கவர முயற்சிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் மேற்கு வங்க தலைவர் கட்சி தாவல் – ஒவைசி பாஜகவிற்கு உதவுவதாகக் குற்றச்சாட்டு

மேலும், வேட்பாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த ரந்தீப் சிங் , “தேர்தலில் தோற்க தொடங்கிய உடன் பாஜக மற்ற கட்சி உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது ” என்று கூறியுள்ளார் .

இந்நிலையில் 22 பேரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

source; the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்