Aran Sei

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி – பங்கேற்கச் சென்ற தலைவர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் பங்கேற்கச் சென்ற, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் உட்பட மூத்த தலைவர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

இன்று (டிசம்பர் 10), மேற்கு வங்க தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வைர துறைமுகத்திற்கு, மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்த, பேரணியில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடா தாக்கப்பட்டுள்ளார்.

அமித் ஷா மீது வீசப்பட்ட பதாகை – எதிர்ப்பின் அடையாளமா?

அவருடன் சென்ற தேசிய பொதுச் செயலாளர் கலியாஷ் விஜயவர்கியா, துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் உட்பட பல பாஜக  தலைவர்களின் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

பாஜகவின் மேற்கு வங்கப் பிரிவு, இந்தத் தாக்குதலை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக

அந்த வீடியோக்களில், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தபடி, திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளுடன் சாலையின் இருபுறமும் மக்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் திடீரெனக் கற்களைக்கொண்டு, பாஜகவின் வாகனங்களை நோக்கி வீசுகிறார்கள்.

இந்தத் தாக்குதலில் பாஜக தலைவர்கள் பயணித்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு சில பாஜக தலைவர்களும் அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அவர்களுடன் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன என்று தி இந்து தெரிவித்துள்ளது.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

மேலும், போகும் சாலைகளில் பல இடங்களில் தடைகள் இருந்ததால் பல்வேறு இடங்களில் பாஜக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதை அடுத்து, வைரத்துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நாட்டா, இன்று (டிசம்பர் 10) அவர் கண்டது மம்தா பானர்ஜி அரசின் சட்டவிரோதமான மற்றும் சகிப்பின்மையற்ற  நிலையைக் காட்டுகிறது என்று கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் அமித் மால்வியா

மேலும், ”ஒரு வாகனம் கூட தாக்குதலில் இருந்து தப்பிக்கவில்லை. என்னிடம் புல்லட் ப்ரூஃப் கார் இருந்ததால் நான் பாதுகாப்பாகத் தப்பித்தேன்.” என்றும் திரிணாமுல் காங்கிரஸின் அணுகுமுறையே எதிர்க்கட்சிகளை நசுக்குவதுதான். திரிணாமுல் காங்கிரஸின் இந்த அணுகுமுறையை பாஜக நசுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரான விஜயவர்ஜியா, “இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். எல்லாப் பக்கங்களிலிருந்தும் கற்கள் வீசப்பட்டன. இது ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது முழுமையான அராஜகம். ஒரு கட்சியின் தேசியத் தலைவர் மீது கல் வீசுவது வங்காளத்தின் கலாச்சாரம் அல்ல.” என்று கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

வங்க தேசத்தின் வளர்ச்சி – இந்தியா கற்க வேண்டியது என்ன?

மேலும், வைரத் துறைமுகம் மக்களவை உறுப்பினரான திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்