Aran Sei

கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்

த்திரபிரதேசத்தில் கொரோனாவால் 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்ததை அடுத்து, அம்மாநில பாஜக தலைவர்கள், யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆக்சிஜனுக்காக மக்கள் மன்றாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ஸ்ரீவஸ்தவா, ரமேஷ் திவாகர், சேசார் சிங் கங்கவார் ஆகியோர்  கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் – அச்சுறுத்தும் கொரோனா மருத்துவமனை தீ விபத்து

இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் உத்திரபிரதேச அரசு என அம்மாநில பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

“உத்திரபிரதேச அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்து உதவிகள் அளிக்கத் தவறிவிட்டது. முதலமைச்சர் அலுவலகத்தைப் பலமுறை தொர்புகொண்டும், யாரும் அழைப்பை ஏற்கவில்லை.”என உயிரிழந்த கங்கவாரின் மகன் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

‘அப்பல்லோ மருத்துவமனையில் திட்டமிட்டபடி தடுப்பூசிகள் போடப்படும்’ – மாநில அரசுகளுக்கு கிட்டாத தடுப்பு மருந்துகள் தனியார் வசம் இருப்பது எப்படி?

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு ரெம்தேசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் அளிப்பதில் உத்திரபிரதேச அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆக்சிஜன், படுக்கைகள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஏற்பாடு செய்த சுகாதார அதிகாரிகளை அழைத்தால், அவர்கள் அழைப்புகளை எடுப்பதில்லை என உத்திரபிரதேச அமைச்சர் பிரேஷ் பதக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sources : Deccan Herald

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்