வங்காள நடிகர் சயோனி கோஷின் ட்விட்டர் பதிவு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி, அவர் மீது பாஜக மூத்த தலைவரும், மேகாலயாவின் முன்னாள் ஆளுநருமான ததகதா ராய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சயோனி கோஷ், 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பகிரப்பட்ட பதிவை தான் பகிரவில்லை என்றும் அப்போது தனது கணக்கை ஹேக் செய்த ஒருவரால் செய்யப்பட்ட தவறான செயல் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்துத்துவத்தை இழிவு செய்வது, இந்து மதத்தை இழிவு செய்வதாகாது – வழக்கறிஞர் வாதம்
இந்தப் புகார் குறித்து, பாஜக தலைவர் ததகதா ராய் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் உட்பட இந்துக்கள் எல்லோரும் புனிதத்திலும் புனிதமாக கருதும் சிவ லிங்கத்தின் மேல், நீங்கள் (சயோனி கோஷ்) ஆணுறை அணிவது போல ஒரு படத்தை பதிர்ந்திருக்கிறீர்கள். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 295 ஏ-வின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்துள்ளீர்கள். இப்போது, அதற்கான விளைவுகளுக்குத் தயாராகுங்கள். இதற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ், மூன்று ஆண்டு சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
Ms. Saayoni Ghosh,You have put a condom on a Shivlinga which we Hindus,including me,hold as holiest of holies! You have thus committed an offence under Section 295A IPC (Deliberate and malicious act intended to outrage religious feelings of any class by insulting …(contd.) https://t.co/bzzXostKvW
— Tathagata Roy (@tathagata2) January 16, 2021
மற்றொரு ட்வீட்டில், சயோனி கோஷுக்கு மேல் காவல்துறையில் அளித்துள்ள புகாரின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
மேலும், அதில், “சயோனி கோஷ், ஏற்கனவே உங்கள் மீது கொல்கத்தா காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தப் புகாரை இணைத்துள்ளேன். இதற்கிடையில், அசாம் மாநில குவஹாத்தியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம், அவருடைய மத உணர்வுகள் உங்களின் மீம்மால் புண்பட்டதாக கூறினார். அவரும் உங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். அதற்கு அசாம் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.” என்று ததகதா ராய் கூறியுள்ளார்.
@sayani06 You have already been reported to Kolkata Police. The complaint is attached. Meanwhile a person from Guwahati has told me that his religious feelings have been hurt by your meme and he is filing a complaint. I hope Assam Police will take cognizance and ask for remand. pic.twitter.com/qn94doOPdG
— Tathagata Roy (@tathagata2) January 16, 2021
இது தொடர்பாக, பெங்களூரைச் சேர்ந்த ஒருவரும் கர்நாடக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள நடிகை சயோனி கோஷ், “ந்ண்பர்களே, 2015 ஆம் ஆண்டு பகிரப்பட்ட பதிவுகள் இப்போது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது மிகவும் அருவருப்பானது . நான் 2010 ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தேன். சிறிது காலத்திலேயே அதன் மீதான ஆர்வத்தை இழந்துவிட்டேன். இருப்பினும்,ட்விட்டர் கணக்கு இருந்தது.” என்று கூறியுள்ளார்.
Dear all, a post from 2015 has been brought to my notice which is extremely obnoxious..for all your information, I have joined twitter on 2010 and after a brief use I lost interest in carrying forward however the account remained. After a while my pr Bhaska Roy intimidated me
— saayoni ghosh (@sayani06) January 16, 2021
Dear all, a post from 2015 has been brought to my notice which is extremely obnoxious..for all your information, I have joined twitter on 2010 and after a brief use I lost interest in carrying forward however the account remained. After a while my pr Bhaska Roy intimidated me
— saayoni ghosh (@sayani06) January 16, 2021
“ஆனால், என்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதைப் பின்னர் தான் கண்டுபிடித்தேன். அதை உடனடியாக மீட்டிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால், நாங்கள் அதை 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் மீட்டோம். அதைத் தொடர்ந்து, நான் மீண்டும் ட்விட்டர் உலகத்தில் களமிறங்கினேன். பெரும்பாலானவற்றை நீக்கும்போது தேவையற்ற சில பதிவுகளை நீக்க மறந்துவிட்டோம்.” என்று நடிகை சயோனி கோஷ் வி்ளக்கமளித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.