Aran Sei

காஷ்மீரில் தேசியக் கொடி கட்டாயம் : ‘காஷ்மீரிகளுக்கு இந்தியத்தை கற்பிப்போம்’ – பாஜக தலைவர்

காஷ்மீருக்கு ‘இந்தியத்தை’ கற்பிக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு பிரத்தியேகக் கொடி என்ற கருத்தாக்கம் முடிந்துவிட்டது என்றும் பாஜகவை சேர்ந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர் கவீந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில், அடுத்த 15 நாட்களுக்குள் காஷ்மீரில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலை அமல்படுத்துமாறு, அனைத்து துணை ஆணையர் மற்றும் துறைத் தலைவர்களிடமும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை தேசியக்கொடியை ஏந்த மாட்டேன் – மெஹ்பூபா முஃப்தி

இது தொடர்பாக, இன்று (மார்ச் 30) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கவீந்தர் குப்தா, “கடந்த 70 ஆண்டுகளில், கோடிக் கணக்கான ரூபாய் செலவழித்த பிறகும் பாரத மாதாவை கொண்டாடும் ஒரு மனிதனைக் கூட காஷ்மீரில் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்முடைய துரதிர்ஷ்டம். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், ஊரடங்குகளும் கல் வீசும் சம்பவங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் அவர்களுக்கு ‘இந்தியத்தை’ கற்பிக்க வேண்டும். இந்திய தேசிய கொடியே நம்முடைய பெருமை. அது காஷ்மீரில் ஏற்றப்படாமல் இருப்பது தவறு. மாநிலங்களுக்கு பிரத்தியேகக் கொடி என்ற கருத்தாக்கம் முடிந்துவிட்டது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்