Aran Sei

‘லக்கிம்பூர் வன்முறைக்கு ஒன்றிய அமைச்சர்தான் காரணம்’ – உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

க்கிம்பூர் வன்முறையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை குற்றம் சாட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால் சிங், பிரதமர் நரேந்திர மோடி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று(அக்டோபர் 14), உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ராம் இக்பால் சிங், “லக்கிம்பூர் வன்முறைக்குப் பின்னால் அஜய் மிஸ்ரா உள்ளார். விவசாயிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் தனது மகனைக் காப்பாற்றும் வேலையை மட்டும்தான் செய்துக்கொண்டிருக்கிறார். இச்சம்பவத்திற்கு அவர் வருத்தப்படவே இல்லை. இச்சம்பவம் மனிதநேயத்தின் மீது படிந்த கறை” என்று கூறியுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: தொடங்கியது விசாரணை – அமைச்சரின் தலையீடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

“அவரது மகன் தனது வாகனத்தால் விவசாயிகளை நசுக்கி கொன்றார். உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அஜய் மிஷ்ரா இன்றும் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில் அரசின் பிடிவாதமான செயற்பாடுகள் மாநிலம் முழுவதும் உள்ள செயற்பாட்டாளர்களை கோபமாக்கியுள்ளது என்றும் விவசாயிகளுக்கு வழங்கியது போலவே, இவ்வன்முறையில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் அரசு வேலையும் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால் சிங் கோரியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்