Aran Sei

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கிடையாது – அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி

பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும் என்பது குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளதாக என்.டி.டி .வி செய்தி வெளியிட்டுள்ளது.

‘வலுப்படும் பாஜகவின் பெண்விரோத, ஆணாதிக்க சிந்தனை’ – பெண்களின் ஜீன்ஸ் தொடர்பாக பாஜக முதல்வருக்கு கண்டனம்

பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த உத்தரகாண்ட முதலமைச்சர் திரந் சிங் ராவத்துக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் உத்தரகாண்ட முதலமைச்சர் திரந் சிங் கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்களால் சமூகத்திற்கு கேடு என்று பேசியிருந்தார்.

பெண்கள் ஆடை தொடர்பாக உத்திரகண்ட் முதல்வரின் கருத்து – மோடியின் புகைப்படத்தைப் பகிர்ந்து பிரியங்கா காந்தி பதிலடி

அந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் விமர்சித்துப் பதிவிட்ருந்தார்.

இந்நிலையில் பேசிய ஸ்மிருதி இரானி ,”யார் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற கூற யாருக்கும் அதிகாரம் கிடையாது. குறிப்பாக அரசியல்வாதிகளின் பணி கொள்கைகளை உருவாக்குவதும், சட்டத்தைக் காப்பற்றுவதும் மட்டுமே ” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களின் ஆடை குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்ட பாஜக முதலமைச்சர்: ‘கிழந்த ஜீன்ஸ் அணிவது தவறுதான்’ கருத்தில் உறுதி

மேலும், பெண்கள் அவர்களது வாழ்க்கையை வாழ எல்லா உரிமையும் உண்டு எனவும், அவர்கள் இவ்வாறுதான் வாழ வேண்டும் என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை எனவும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளதாக என்.டி.டி .வி செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்