Aran Sei

குதுப் மினார் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை அகற்ற வேண்டும் – தேசிய அருங்காட்சியக ஆணையம் கோரிக்கை

Credit: Sahapedia

குதுப் மினாரின் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என இந்திய தொல்லியல் துறையை (ஏ.எஸ்.ஐ) தேசிய அருங்காட்சியக ஆணையம்(என்.எம்.ஏ) கேட்டுக்கொண்டுள்ளது.

சிலைகள் அவமரியாதையான விதத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தேசிய அருங்காட்சியக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இந்தியத் தொல்லியல் துறைக்குத் தேசிய அருங்காட்சியக ஆணையம் எழுதியிருந்த கடிதத்தில், “தேசிய அருங்காட்சியகத்தில் மற்ற பழங்கால பொருட்களை வைத்திருப்பதை போல மரியாதைக்குரிய இடத்தில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வங்கியில் மோசடி செய்த பெரும்பணக்காரர்களின் சொத்துக்களை முடக்க சட்டம் தேவை’ – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

எம்.என்.ஏ மற்றும் ஏ.எஸ்.ஐ இரண்டும் ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வருகிறது.

ஏ.எஸ்.ஐக்கு கடிதம் எழுதியிருப்பது தொடர்பாக பேசியுள்ள என்.எம்.ஏவின் தற்போதைய தலைவரான பாஜகவைச் சேர்ந்த தருண் விஜய், “நான் பல முறை அந்த இடத்திற்கு சென்றிருக்கிறேன். சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் விதத்தை அவமரியாதையானதாக உணர்கிறேன். மசூதிக்கு வரும் பார்வையாளர்களின் காலடியில் இருக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன” என அவர் கூறியுள்ளார்.

”காலணியாதிக்கத்தின் அடையாளங்களை அழிக்க, சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டீஷ் அரசர்கள் மற்றும் ராணிகளின் சிலைகளை அகற்றினோம். சாலைகளின் பெயர்களை மாற்றியுள்ளோம். அதேப் போன்று முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் எதிர்க் கொண்ட கலாச்சார இனப்படுகொலையை மாற்றியமைக்க நாம் பணியாற்ற வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % மருத்துவ உள் ஒதுக்கீடு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

”மன்னர் அனங்பால் தோமரால் கட்டப்பட்ட 27 ஜைன மற்றும் இந்து கோவில்கள் இடிக்கப்பட்ட பிறகு இந்த சிலைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ள விதம் இந்தியாவை அவமதிப்பதாகும். திருத்தம் தேவை” என தருண் விஜய் கூறியுள்ளார்.

குதுப் மினார் வளாகத்திற்குள் உள்ள குவாவத் உல் இஸ்லாம் மசூதியில் இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான ’உல்டா கணேஷ்’ மசூதியின் தெற்கு பகுதியை நோக்கியபடி வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலை, அதே மசூதியில் இரும்பு கூண்டிற்குள் தரையில் வைக்கப்பட்டுள்ளது.

Source: The Wire

ராமராஜனா? ராமராஜ்ஜியமா? 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்