Aran Sei

சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் – குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் விடுதலை

ட்டக்கல்லூரி மாணவி தொடுத்த பாலியல் வழக்கியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான சின்மயானந்த் விடுதலை செய்ப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான வழக்கை விசாரிக்கும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பி.கே.ராய் வழங்கியதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் பறிக்கும் நோக்கில் சின்மயானந்த் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாக, அவரது வழக்கறிஞர் பதிந்த வழக்கிலிருந்து மாணவி மற்றும் அவரது நண்பர் விடுவிக்கப்பட்டிருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

சின்மயானந்தாவின் முமுக்‌ஷூ ஆசிரமத்தால் உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில் நடத்தப்படும் சட்ட கல்லூரியில் பயின்று வந்த மாணவி தனது முகநூல் கணக்கில் காணோளி  ஒன்றை பதிவிட்டார். ஆகஸ்ட் 24, 2019 ஆம் தேதி பகிரப்பட்டிருந்த அந்தக் காணொளியில் பெயர் கூறிப்பிடாமல் பாலியல் புகார் தெரிவித்தார்.

சின்மயானந்தாவால் ஒரு ஆண்டாகப் பாலியல் ரீதியாக தன்னை சுரண்டப்பட்டுவந்ததாக செப்டம்பர் 9, 2019 ஆம் தேதி அந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறினார்.

தனக்கு நீதி கிடைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடம் மாணவி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையீட்டு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது.

டெல்லி கலவரத்தில் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு – ஆவணங்களை காவல்துறை சரியாக பராமரிக்கவில்லை என நீதிமன்றம் குற்றச்சாட்டு

அந்தக் குழுவிடம் ஆதாரமாக 43 காணொளி கொண்ட பென் டிரைவ் ஒன்றை அந்த மாணவி அளித்திருந்தார். காணொளிகள் அனைத்து போலி என்றும், சின்மயானந்தாவிடம் பணம் பறிக்க இந்தப் புகார் கூறப்படுவதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக இந்திய தண்டனைச் சட்டம் 376 (C) பிரிவின் கீழ பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சின்மயானந்தா, வழக்கின் விசாரணையின்போது மசாஜ் செய்யவே மாணவியை அழைத்ததாகவும், தனது செயலுக்கு வெட்கப்படுவதாகவும், தெரிவித்திருந்தார்.

‘இந்தியாவில் பல்லாண்டுகள் இருப்பவர்களுக்கு வாழ உரிமையில்லையா?; சந்தேகம் வேண்டாம் சிஏஏ கேரளாவில் வராது’ – பினராயி விஜயன்

பிப்ரவரி 3, 2020 ஆம் தேதி சின்மயானந்தா இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியிருந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை மறுத்த மாணவி, அழுத்ததின் காரணமாக அவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கிலிருந்து சின்மயானந்தாவை விடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், சின்மயானந்தா தொடர்ந்த வழக்கிலிருந்து மாணவி மற்றும் அவரது நண்பர் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்