Aran Sei

‘சங்கு ஊதி, புனிதப் புகை வளர்த்து ஆக்ஸிஜனை அதிகரிப்போம்’ – கொரோனாவை ஒழிக்க பாஜக தலைவர் சொல்லும் வழி

த்தரபிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த பாஜக தலைவர் கோபால் ஷர்மா தன் அபிமானிகளை சேர்த்துக்கொண்டு, தள்ளு வண்டியில்  ‘புனித புகை’ என்ற பெயரில் புகை வளர்த்தபடியும், சங்கை ஊதியபடியும் அந்நகர வீதிகள் செல்லும் காணொளி, அண்மையில் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

அக்காணொளியில், கோபால் ஷர்மாவும் அவரது அபிமானிகளும் ஜெய் ஸ்ரீ ராம், ஹரஹர மகாதேவ் என்று முழக்கங்கள் எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து, கோபால் ஷர்மா பேசுகையில், “இந்தப் புனிதப் புகை காற்றில் பரவும் போது கொரோனா தொற்றைத் தடுக்கும். காரணம், வளிமண்டலத்தில் உள்ள கொரோனா கிருமியை இப்புகை கொல்லும். இந்தப் புனிதச் சங்கும், புனிதப் புகையும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிகரிக்கும். அதனால், மக்கள் நோயிலிருந்து விரைவாக மீள்வார்கள்.” என்று கூறியுள்ளார்.

அண்மையில், “நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். அதானால் தான் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Source; indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்