Aran Sei

மதமாற்றத்தைத் தடுக்க பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு – மனுவை ஏற்க மறுத்து எச்சரித்த நீதிபதி

மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி எஃப். நாரிமன், “மதத்தைப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமையுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் குழுக்களை முகநூல் நிறுவனம் கட்டுப்படுத்தவில்லை – மக்கள் உரிமை அமைப்பினர் குற்றச்சாட்டு

மேலும், மத நம்பிக்கை என்பது அடிப்படை உரிமையின் ஒரு பகுதி என்றும் நீதிபதி எஃப். நாரிமன் கூறியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்திருந்த மனுவில் . “ இந்தியாவில் மதமாற்ற சம்பவங்களுக்கு விளிம்பு சமூக மக்கள் மதமாற்றத்துக்குள்ளாவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.

சோகனூரில் தலித்துகள் இரட்டைப் படுகொலை – நடந்தது என்ன?

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்தால் வருங்காலத்தில் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் – ” இந்திய ஆவணங்களை ஃபிரெஞ்சு தரப்புக்குக் கொடுத்து பல கோடி சம்பாதித்த இடைத்தரகர்கள் “

இதை தொடர்ந்து அஸ்வினி உபாத்யாயா இந்த மனுவை திரும்பப் பெற்றுள்ளார்

மேலும் இந்த மனுவில் ” மாவட்டந்தோறும் மந்திர வேலைகள், மூடநம்பிக்கைகள், மதமாற்றம் நடைபெறாமல் இல்லை. நாடுமுழுவதும் ஒவ்வொரு வாரமும் கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ” என்றும் அஸ்வினி உபாத்யாயா குறிப்பிட்டிருந்தார்

source: the hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்