Aran Sei

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

credits : the wire

ன் முகத்தைக் காண்பிப்பதன் மூலமாகவும், இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரிப்பதன் மூலமாகவும், வகுப்புவாத கருத்துக்களை தெரிவிப்பதன் மூலமாகவும், இந்துக்களை ஒன்றிணைக்க பாஜக விரும்புகிறது. ஆனால் கடந்த முறை போல் அல்லாமல், அவர்களால் தற்போது வெற்றி பெற இயலாது” என, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருத்தின் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

126 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மூன்று ( மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 16) கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருத்தின் அஜ்மல் அளித்த நேர்காணலின் சிறு பகுதி

”இந்த நாட்டுக்கே, அசாம் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும், பாஜகவின் தோல்வி இந்த மாநிலத்தில் இருந்து தான் தொடங்கும். எங்கள் கூட்டணி ( காங்கிரஸ், ஏஐயுடிஎஃப், போடோலாந்து மக்கள் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், அன்சலிக் கானா மோர்ச்சா) இதற்காக கடுமையாக உழைத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

`பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ – இது பாஜகவின் அரசியல் சதி

”மேற்கு வங்கம், அசாம், தமிழகம், கேரளா, புதுச்சேரி என அனைத்து மாநில தேர்தலிலும் பாஜக தோற்கடிக்கப்படும். பாஜகவின் தேர்தல் தோல்வி, இந்தத் தேசத்துக்கு மதச்சார்பற்ற சக்திகள் தான் வெற்றிப் பெறும் எனும் செய்தியை உணர்த்தும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ஓவைசியாக உருமாறும் அஜ்மல் – அசாம் தேர்தல்

”கடந்த 2016 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யும்பொழுது ஒரு அலை இருந்தது. ஆனால், தற்போது எந்த அலையும் இல்லை. அவர் இங்கு ஐந்து முறை வந்துவிட்டார். ஆனால், அவரால் அலையை உருவாக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ள பத்ருத்தின் ”என் முகத்தைக் காண்பிப்பதன் மூலமாகவும், இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரிப்பதன் மூலமாகவும், வகுப்புவாத கருத்துக்களை தெரிவிப்பதன் மூலமாகவும், இந்துக்களை ஒன்றிணைக்க பாஜக விரும்புகிறது. ஆனால் கடந்த முறை போல் அல்லாமல், அவர்களால் தற்போது வெற்றி பெற இயலாது” என்று கூறியுள்ளார்.

முகலாயர்களை வீழ்த்த வேண்டும் – தேஜஸ்வி சூர்யா மீண்டும் சர்ச்சை பேச்சு

பாஜக தன்னை (பத்ருத்தின் அஜ்மல்) முகலாயர் என விமர்சிப்பது தொடர்பாக பேசிய அவர், ”பாஜகவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை, அதனால் என் முகத்தின் மூலமாக முகலாயர் என அடையாளப்படுத்த முயல்கிறார்கள். எனக்கும் முகலாயர்களுக்கும் என்ன தொடர்பு” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

`அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்

பத்ருத்தின் அஜ்மல் பேசுவது போல சமீபத்தில் சித்தரிக்கப்பட்ட காணொளி வெளியானது தொடர்பாக பேசிய அவர், ”என் கட்சியைப் பற்றி விமர்சிக்க பாஜகவிற்கு எதுவும் கிடைக்கவில்லை, எனவே அவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

SOURCE : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்