“கொரோனாவை விட பாரதிய ஜனதா கட்சி கொடியது” என்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது தொகுதியான பஷிர்ஹட்டில் பேசிய நுஸ்ரத் ஜஹான் “உங்கள் கண்களையும், காதுகளையும் அகல திறந்து வையுங்கள். எனென்றால், கொரோனாவை விட கொடியவர்கள் உங்களைச்சுற்றி உள்ளனர். கொரோனாவை விட கொடியது என்னவென்று உங்களுக்கும் தெரியுமா? அது பாரதிய ஜனதா கட்சிதான். ஏனென்றால் நம்முடைய கலச்சாரத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஏனென்றால், மனிதத்தன்மையை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. நம்முடைய உழைப்பின் மதிப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களுக்கு வியாபாரம் ஒன்று மட்டும்தான் தெரியும். அவர்களிடம் நிறை பணம் உள்ளது. அதை அவர்கள் பரவலாக செலவழிக்கிறார்கள். பிறகு, அவர்கள் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக திருப்பி விட்டு, கலவரத்தை உருவாக்கிறார்கள்.” என்று கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் படுத்திய அமித் மால்வியா – எச்சரித்த டிவிட்டர்
இதற்கிடையில், சில தினங்களுக்கு முன், மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து, கொனோரான தடுப்பு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. மேற்கு வங்க அமைச்சர் சித்திக்ஹூல்லா சௌத்ரி நடத்திய சாலை மறியல் போராட்டமே, போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் கண்டித்து, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
In WB, worst kind of vaccine politics is unfolding. First, Siddiqulla Chowdhury, a sitting minister in Mamata Banerjee’s cabinet, holds up trucks carrying vaccines. Now a TMC MP, campaigning in Muslim majority Deganga, likens BJP to Corona.
But Pishi is silent. Why? Appeasement?
— Amit Malviya (@amitmalviya) January 15, 2021
அதில் “மேற்கு வங்கத்தில், மோசமான தடுப்பு மருந்து அரசியல் நடந்து வருகிறது. மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் உள்ள, சித்திக்ஹூல்லா சௌத்ரி , தடுப்பு மருந்து வாகனத்தை தடுத்து நிறுத்தினார். தற்போது, அக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான டெகாங்காவில் நடந்த பிரச்சாரத்தில், பாஜகவை கொரோனாவுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் பிஷி (மம்தா) அமைதியாக இருக்கிறார். ஏன்?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
தடுப்பு மருந்து வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்திக்ஹூல்லா சௌத்ரி, அந்த போராட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும் காவல்துறைக்கு அது தெரியும் என்றும் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.