Aran Sei

செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பின்னால் பாஜக இருக்கிறது – முதல் தடுப்பை உடைத்த விவசாயி சத்னம் சிங் பன்னு குற்றச்சாட்டு

செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்திற்கும் விவசாயிகளுக்கும் தொடர்பில்லை என்றும், விவசாயிகள் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜகவே செய்திருக்கிறது என முதல் தடுப்பை உடைத்த விவசாயி சத்னம் சிங் பன்னு கூறியிருப்பதாக என்டிடிவி  செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தின விழாவிற்கு அணிவகுப்பிற்கு பிறகு அனுமதிக்கப்பட்டு, நடைபெற்ற வந்த  டிராக்டர் பேரணியில், விவசாயிகள் தடுப்புகளை உடைத்து, பாதையை மாற்றிச் சட்டவிரோதமாக இறங்கினர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்

டெல்லியின் மைய பகுதிக்கு நுழைந்த விவசாயிகள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள், ”நிசான் சாஹிப்” என்ற கொடியை ஏற்றியதோடு அங்கிருந்த காவல்துறையினரை தடிகள், கொடிகள் கொண்டு தாக்கியது காணொளியில் பதிவாகி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”நாங்கள் அவுட்டர் ரிங் ரோடு வழியாகச் செல்வோம் என அறிவித்திருந்தோம். விவசாயிகளின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும், சன்யுக்ட் கிசான் மோர்ச்சாவும், இதை கூறியிருந்தது. ஆனால், பின்னர் பின்வாங்கியது. காவல்துறையினர் எங்களை தடுக்கவே நாங்கள் தடுப்புகளை உடைத்தோம். நாங்கள் அவுட்டர் ரிங் ரோடில் அமைதியாகச் செல்வோம் எனக் காவல்துறையிடம் தொடர்ந்து கூறிவந்தோம்” எனச் சத்னம் சிங் பன்னு என்டிடிவி  யிடம் தெரிவித்தார்.

டெல்லி வன்முறைக்கு மத்திய அரசே பொறுப்பு – மம்தா பானர்ஜி, சரத் பவார் குற்றச்சாட்டு

செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்திற்கும் எங்கள் அமைப்பினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பஞ்சாபி நடிகரும் செயல்பாட்டாளருமான தீப் சித்து தான் கலவரத்திற்கு காரணம், செங்கோட்டையில் கொடியை ஏற்றியது அவர் தான். சித்து ஆளும் கட்சியுடன் தொடர்பில் இருப்பவர்,  என சத்னம் சிங் பன்னு கூறினார்.

உண்மை சரிபார்ப்பு – செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை அகற்றவில்லை, காலிஸ்தான் கொடியை ஏற்றவும் இல்லை

செங்கோட்டையில் நடைபெற்ற அனைத்தும் தீப் சித்துவால் நடைபெற்றது என்றும் காவல்துறை ஏன் அவரை தடுக்கவில்லையெனக் கேள்வி எழுப்பியதாக் என்டிடிவி  கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்