Aran Sei

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் மறந்த பாஜக – சிவசேனா காட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்பட்டுள்ளது அராஜகத்தின் தோல்வியை காட்டுவதாகவும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி பயத்தால் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், போராடும் விவசாயிகளின் ஒற்றுமைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதிர்கட்சிகளின் குரல்களை நசுக்கி, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. விசாயிகளின் போராட்டத்தையும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும், தண்ணீரும் துண்டிக்கப்பட்டன. இந்த போராட்டத்தின் போது, விசாயிகள் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானியர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டனர்” என்ற சாம்னா தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“விசாயிகள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்று தெரிந்துகொண்ட பிறகும், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தோல்வியடையக் கூடும் என்பதை உணர்ந்த பிறகும் மோடி அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இது விசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி” என்று தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

அராஜகம் இறுதியில் வீழ்த்தப்படும் என்பதையே மகாபாரதமும், ராமாயணமும் கற்றுத்தருகின்றன. ஆனால், போலி இந்துத்துவவாதிகள் இதை மறந்து விட்டு உண்மை மற்றும் நீதியின் மீது தாக்குதல் தொடுத்தனர் என்று சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இனி வரும் காலத்திலாவது இது போன்ற சட்டங்களை கொண்டு வரும்போது, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு தனது அராஜகபோக்கை கைவிட்டு விட்டு எதிர்கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் அநீதிக்கும், அராஜகத்திற்கும் எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சம்னா செய்தித்தாளின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்