Aran Sei

இந்து-இஸ்லாமியரிடையே வெறுப்பை தூண்டுவதை தவிர தெலுங்கானாவிற்கு பாஜக வேறு எதையும் செய்ததில்லை – அமைச்சர் ராமாராவ் குற்றசாட்டு

தேர்தல் ஆதாயங்களுக்காக பாஜக வகுப்புவாத பகையைத் தூண்டி விடுவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ராமாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

‘பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது; ட்ரபுள் என்ஜின்’ -தெலுங்கானா முதலமைச்சர் கிண்டல்

கரீம்நகரில் ஒரு குடிநீர் திட்டத்தைத் திறந்து வைத்த அமைச்சர் ராமாராவ் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தெலுங்கானாவிற்கு எதையும் செய்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாண்டி சஞ்சய் குமார், தனது அரசியல் ஆதாயங்களுக்காக இந்து-இஸ்லாமியர் மோதல்களைத் தூண்டுவதைத் தவிர, கடந்த 3 ஆண்டுகளில் அவர் தனது தொகுதிக்கு என்ன செய்தார்? என்று அமைச்சர் ராமாராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானாவில் ராமர் கோயில்; மதம் மாறிய இந்துக்கள் தாய் மதம் திருப்பப்படுவர் – பாஜக மாநிலத் தலைவர் வாக்குறுதி

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை தவறாகப் பேசுவதைத் தவிர தெலுங்கானா மாநில பாஜக தலைவருக்கு வேறு எந்த திறமையும் இல்லை. அவரது நாடாளுமன்றத் தொகுதியான கரீம்நகரின் வளர்ச்சிக்கு கூட ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வாங்கி தரக் கூடிய திறனும் அவரிடம் இல்லை என்று அமைச்சர் ராமாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்