Aran Sei

என்.ஐ.ஏவை கொண்டு உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு: சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

ந்தியாவில் 2009 முதல் 2022 வரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் அமைப்பு, உபா: கருத்து வேறுபாடு மற்றும் அரச பயங்கரவாதத்தை குற்றமாக்குதல் எனும் தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உமர் காலித்தின் பேச்சுக்கு உபா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம்

அதில், 2015-2020 ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் வருடாந்திர அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி பதியப்படும் வழக்குகளின் தண்டனை விகிதம் 49.67 விழுக்காடாகவும், உபா சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் தண்டனை விகிதம் 27.57 விழுக்காடாகவும் உள்ளது.

அதே சமயம் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி ஒரு கைதிக்கான தண்டனை விகிதம் 22.19 விழுக்காடாகவும், உபா சட்டத்தின் கீழ் ஒரு கைதிக்கான தண்டனை விகிதம் 2.8 விழுக்காடாகவும் உள்ளது.2015-2020 ஆம் ஆண்டில் 5,924 உபா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,371 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த உபா வழக்குகளின் அடிப்படையில், மணிப்பூர் (1,965 வழக்குகள்) முதலிடத்திலும், ஜம்மு காஷ்மீர் (1,163), அசாம் (923), ஜார்கண்ட் (501 வழக்குகள்) மற்றும் உத்தரபிரதேசம் (385 வழக்குகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்பு விடுத்த இந்துத்துவவாதிகள் – உபா சட்டத்தில் கைது செய்ய காவல்துறை மறுப்பு

2018 ஆம் ஆண்டில், உபா வழக்குகளில் கைது செய்யப்பட்ட 1,421 பேரில் 232 பேர் (16.32%) ஜாமீன் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டில் 1,948 பேர் கைது செய்யப்பட்டு, 625 பேருக்கு (32.08%) ஜாமீன் பெற்றுள்ளனர். மற்றும் 2020 ஆம் ஆண்டில், மொத்தம் 1,321 பேர் கைது செய்யப்பட்டு 223 (16.88%) பேர் ஜாமீன் பெற்றுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு, இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிலவரப்படி, 456 வழக்குகளை பட்டியலிட்டது, அவற்றில் 78% உபா குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்டவை. 2009 முதல் மே 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 69 உபா வழக்குகளும், பாஜக ஆட்சியமைக்க 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 288 உபா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது ஆண்டுக்கு சராசரியாக 13 பேர் உபா சட்டத்தினால் பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் பாஜக ஆட்சியின் போது இது 34 ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக, டெல்லி(45), ஜம்மு-காஷ்மீர் (42), பஞ்சாப் (29), கேரளா (27), அசாம் (26), ஜார்க்கண்ட் (22), பீகார் (18), மணிப்பூர் (18), மகாராஷ்டிரா (16), மேற்கு வங்கம் (15), உத்தரபிரதேசம் (14), கர்நாடகா (13), தமிழ்நாடு (13), ஆந்திரா (12) மற்றும் நாகாலாந்து (7) ஆகிய மாநிலங்களில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான உபா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திரிபுரா வன்முறை: ‘உபா சட்டத்தால் உண்மையை மறைக்க முடியாது’- ராகுல் காந்தி

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 18 (சதிக்கான தண்டனை, முதலியன) குற்றச்சாட்டு சம்பந்தமாக பதிவான 238 வழக்குகளில், 64% வழக்குகளில் (152 வழக்குகள்) எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.

மாநில காவல்துறையிடமிருந்து விசாரணையை மாற்றுவதற்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்கான ஒன்றிய அரசின் அதிகாரம் கூட்டாட்சி தத்துவத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது.

தேசிய புலனாய்வு முகமையின் இணையதளத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களால் கையாளப்பட்ட அனைத்து உபா வழக்குகளிலும் 41 (12%) வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்குகளாகும்.

தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு – ஊடகவியலாளர் உள்ளிட்ட 8 பேரை உபா சட்டத்தில் கைது செய்த காவல்துறை

அதே நேரத்தில் 316 (88%) வழக்குகள் மாநில விசாரணை முகமைகளில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளன. இது மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதா? அல்லது இந்த இடமாற்றங்களுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டார்களா என்பது ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பொய்யான உபா வழக்குகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை ரத்து செய்து, தேசிய புலனாய்வு முகமை கலைக்க வேண்டும் என்றும் அறிக்கை கோரிக்கை வைத்துள்ளது.

‘மக்களை வதைக்கும் உபா, தேசத்துரோக சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும்’ – ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன்

அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக பிணையில் விடுதலை செய்ய வேண்டும். விளிம்புநிலை சமூகங்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பிறருக்கு எதிராக வேண்டுமென்றே பொய்யான மற்றும் சோடிக்கப்பட்ட வழக்குகளைத் தொடுத்துள்ள” அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை கோரிக்கை வைத்துள்ளது.

Source : the hindu

Ponniyin Selvan Decoded | Nathan Explains Manirathnam’s Cinema Politics | Vaathi Raid | Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்