ஃபேஸ்புக் நிறுவனம் பக்க சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்கிடம், மத்திய அரசு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் ’ஆபத்தான அமைப்பு’ என்று பஜ்ரங் தளத்தை, ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழு அடையாளப்படுத்தியுள்ளது. அந்த அமைப்பை, ஃபேஸ்புக்கில், தடை செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் இயங்க பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிப்பதென்பது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை பாதிப்படைய செய்வது மட்டுமின்றி, இந்தியாவை ஆளும் இந்துத்துவ கோட்பாட்டை கொண்டுள்ள அரசியல்வாதிகளை ஆத்திரப்படுத்தும் செயல் என ஃபேஸ்புக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்
மேலும், இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நபர்களால் உடல் ரீதியான தாக்குதல்களை கூட சந்திக்க நேரலாம் என பாதுகாப்புக் குழுவால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்
இது தொடர்பாக, இந்தியாவின் ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன் நாடாளுமன்ற நிலைக்குழுவால் விசாரிக்கப்பட்டார்.
அப்போது நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஷி தரூர் மற்றும் கார்த்திக் சிதம்பரம், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியை சுட்டிக்காட்டி பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தடை செய்தால், நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் பாதிப்பும் ஏற்படும் என அஞ்சி, பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தது குறித்து கேள்வியெழுப்பினர்.
பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி
இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன், ஃபேஸ்புக்கின் உண்மை அறியும் குழுவின் ஆய்வில், பஜ்ரங் தளத்தின் பதிவுகள் எதுவும் ஃபேஸ்புக்கின் சமூக வலைதள விதிமுறைகளுக்கு எதிராக இல்லை என்று பதிலளித்தார்.
மேலும், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் பரபரப்பட்ட வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க, ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் எனவும் அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
‘இந்தியாவிடம் ஃபேஸ்புக் பொய் சொல்கிறதா’ – ராகுல் காந்தி கேள்வி
இதற்கு பதிலளித்த அஜித் மோகன், ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து வகையான வெறுப்பு பிரச்சாரங்களையும் கண்டிப்பதாகவும், ஃபேஸ்புக் நிறுவனம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் சார்பானது இல்லை என்றும் பதிலளித்தார்.
திருடப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்ஃபோன் எண்கள் – ஒரு எண் சுமார் 1500 ரூபாய்க்கு விற்பனை
மேலும், டெல்லிக்கு வெளியே இருக்கும் ஒரு தேவாலயத்தை பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோவை, ஃபேஸ்புக்கில் இரண்டரை லட்சம் பேர் பார்த்துள்ளதையும், அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி அங்கி தாஸ், இஸ்லாமிய விரோத கருத்துக்களை முன்வைத்த பாஜக தலைவருக்காக பரப்புரை செய்தததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி விலகியதையும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிவு செய்திருந்தது.
கூகுள் ரகசியமாக ஃபேஸ்புக்கிற்கு உதவியது – அமெரிக்க மாகாண அரசுகள் குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்தியாவின் வெறுப்பு அரசியலுடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கடிதம் மூலமாக மத்திய பாஜக அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அனுமுலா ரேவந்த் ரெட்டி எழுதிய கடிதத்தில், வெளிநாட்டு நிறுவனமான ஃபேஸ்புக் கட்சி சார்புடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?
இந்தியாவின் தேர்தல் மற்றும் ஜனநாயகம் பற்றிய பேஸ்புக்கின் உள்ளடக்க ஒழுங்குமுறைக் கொள்கைகளை, அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதா என்று அவர் கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மின்னனு மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்தி குறிப்பை அரசு கவனத்தில் எடுத்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் நடுநிலைமை பற்றியும் ஒருமைப்பாடு பற்றியும் அந்நிறுவனத்துக்கு அரசு கடிதம் வாயிலாக கேள்வியெழுப்பியதாக கூறயுள்ள அவர், “ஃபேஸ்புக்குடன் இருக்கும் இந்த பிரச்சனையை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவெ கையாண்டு கொண்டிருக்கிறது” என்றும் தோத்ரே கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.